மரம்
வெய்யிலுக்கு நிழலாவேன்
மழைக்குக் குடையாவேன்
அழகிய பறவைகள் சரணாலயமாவேன்
சாலை இருபுறமும் அழகு சேர்ப்பேன்
ஓலைகள் தந்து கூரையாவேன்
படுக்கப் பாயும் பெருக்கத் துடைப்பமும்
பலகையும் பயனுள்ள பொருள் பலவுமளிப்பேன்
கிளைகள் பல தந்து விறகாவேன்
கரிமில வாயு உண்டு காற்றைத் தூய்மை செய்வேன்
காய்,கனிகள், உண்ணத் தருவேன்
நோய்,நொடிக்கு மருந்தளிப்பேன்
விருந்துண்ண இலையளிப்பேன்
இருந்தும் மனிதனே நீ என்னை
வெட்டியழிப்பதேன் சற்றே சிந்திப்பாயே
No comments:
Post a Comment