அபிராமி அந்தாதி 67
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. அன்னையே!
மின்னலை.....
பல்லவி
மின்னலைப் போலத் தோற்றமுடையவளே
அன்னையே கேசவனின் அழகிய சோதரியே
சமஷ்டி சரணம்
உன்னையொரு மாத்திரைப் போதும் மனத்தில்
எண்ணித் துதிக்காத இவ்வுலக மாந்தரெல்லாம்
வண்மை, கோத்திரம்,கல்வி,குணம்,குலம்,குன்றி
ஓடேந்தி வீடு தொறும் பிச்சை எடுப்பார்
No comments:
Post a Comment