அபிராமி அந்தாதி 90
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
என் மனத்தமரையில்...
பல்லவி
என் மனத்தாமரையில் தானே வந்தமர்ந்தாய்
உன் பழைய இடமென்றே கேசவன் சோதரி
அனுபல்லவி
இன்னும் இவ்வுலகில் நானடைய முடியாதென
ஒன்றும் இல்லையென்றே உன்னருளால் சொல்வேன்
சரணம்
துன்பம் வராமலெந்தன் பிறப்பிறப்பொழித்தாய்
அன்று பாற்கடலில் தோன்றிய அமுதத்தை
நன் மருந்தெனவே அமரருக்களித்திட
பன்னகசயனனுக்கு துணைபுரிந்தவளே
No comments:
Post a Comment