அபிராமி அந்தாதி 46
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
ஆலமுண்ட .....
பல்லவி
ஆலமுண்ட நீலகண்டன் இடமமர்ந்தவளே
பாலே பசும்பொன்னே கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
ஞாலம் பழிக்கும் செயல்களை செய்தாலும்
சீலமில்லாச் செயலென்று அவர் நினைத்தாலும்
மேலோர் தம் அடியாரை பொறுப்பது புதிதன்று
மேலுமவ்வண்ணம் செயும் நானுமுனை வாழ்த்துவனே
No comments:
Post a Comment