அபிராமி அந்தாதி 49
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
சங்கீத.....
பல்லவி
சங்கீத வடிவான கேசவன் சோதரியே
பங்கய பதம் பணிந்தேன் காத்தருள்வாயே
அனுபல்லவி
தங்குமென் ஆவியை மேனியிலிருந்தெடுக்க
பொங்கு வெங்கூற்றுவன் நெருங்கும் வேளை
சரணம்
மங்கலச் செல்வியர் அரம்பை அரிவையர்
அனைத்து தேவ மகளிரும் புடை சூழ
இங்கெழுந்தருளி வளைக்கரத்துடனே
சங்கரி நரம்புடைய யாழெனும் அழகிய
No comments:
Post a Comment