மீனாக்ஷி.......
பல்லவி
மீனாக்ஷி என்னைக் காத்திட தருணம் இதுவே
தீனனெனக்கு உனையன்றி யாருளார் தாயே
அனுபல்லவி
தேனினுமினிய தமிழ் முழங்கும் தென்மதுரை
மாநகர்தனில் சுந்தரேசன் மனம் மகிழ
சரணம்
பாண்டியன் மலையத்வஜன் மனம் கவர்ந்த
காஞ்சனமாலையின் தவப் புதல்வியே
வேண்டிய அடியார்க்கு வேண்டிய வரம் தரும்
கேசவன் சோதரி ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
இராகம் : ஹரிநாராயணி தாளம்: மி.ஜம்பை
No comments:
Post a Comment