அபிராமி அந்தாதி 75
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
கலையாது......
பல்லவி
கலையாது கற்பக மர நிழலிலமர்வர்
மலரணிந்த குழலுடைய கேசவன் சோதரி
அனுபல்லவி
முலைப்பால் தரும் தாயில்லாதவரும்
நிலையிலா இவ்வுலகில் பிறவாதொழிவர்
சரணம்
மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்
அலைகள் பொங்கும் உப்புக்கடலும் புவனமும்
மலைமகளுந்தன் திருவயிற்றில் பெற்றவளே
நிலையாயுன் மேனியை நினைந்து துதிப்பவர்
No comments:
Post a Comment