அபிராமி அந்தாதி 62
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
பொன் தாமரைக் கரத்தில்.......
பல்லவி
பொன் தாமரைக் கரத்தில் கரும்பு வில்லுடனும்
மென் மலரம்புடனும் காட்சி தருபவளே
அனுபல்லவி
என் மனத்தில் சித்திரமாய் நிலைத்திருப்பவளே
உன்னையே துதித்தேன் கேசவன் சோதரி
சரணம்
பொன் மேரு மலையை வில்லாக க்கொண்டு
புன் சிரிப்பதனால் முப்புரம் சாய்த்தவனை
கண் சிவந்த மதயானைத் தோலையணிந்தவனை
உன்னழகு குரும்பையொத்த தனங்களால் சாய்த்தவளே
No comments:
Post a Comment