அபிராமி அந்தாதி 86
மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
பாலையும்.......
பல்லவி
பாலையும் தேனையும் பாகையும் விடவும்
சால இன் குரலுடைய கேசவன் சோதரி
அனுபல்லவி
மாலயனும் மறைகளும் வானவரும் தேடுமுந்தன்
காலையும் வடிவையும் காணாதிருக்கையில்
சரணம்
காலன் பல கிளைகள் கொண்ட வேலையென் மேலே
விடும் போது நீயும் என் முன்னே தோன்றி
வளைகளணிந்த திருக்கரத்துடனும்
திருவடி காண்பித்து அபயமளிப்பாய்
No comments:
Post a Comment