அபிராமி அந்தாதி 66
வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
அரிய செயலெதுவும்....
பல்லவி
அரிய செயலெதுவும் செய்யும் வகையறியேன்
சிறியேனுன் மலரடி அன்றி வேறொன்றறியேன்
அனுபல்லவி
பெரிய பசும்பொன் மேருவை வில்லாயுடைய
அரனிடமமர்ந்த கேசவன் சோதரி
சரணம்
கரியவளே உனைப் போற்றிப் புகழ்ந்திடும்
அறிவொன்றுமில்லாத அறிவிலி யானெனினும்
பரிவுடன் நானழைத்த உனது திருநாமங்கள்
செறிவான பொருளுடைய அழகிய தோத்திரமே
No comments:
Post a Comment