அண்ணாமலையானே....
பல்லவி
அண்ணாமலையானே ஆனந்த ஜோதியே
உண்ணாமைலையாள் உடனுறைத் தெய்வமே
அனுபல்லவி
பண்ணாயிரம் பலர் பாடியே போற்றிடும்
கார்த்திகை தீபமாய்க் காட்சியளித்திடும்
சரணம்
திருமால் பிரமன் அடி முடி தேடிடும்
அருணாசலனே செம்பொற்சுடரே
பிறவிப்பிணியகற்றும் கேசவன் நேசனே
திருவண்ணாமலைக் கலியுக க்கடவுளே
இராகம்: சுத்தசாவேரி ( தீக்ஷிதர் சம்பிரதாயம்)
தாளம் : ஆதி
No comments:
Post a Comment