அபிராமி அந்தாதி 73
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
திரிபுரசுந்தரி......
பல்லவி
திரிபுரசுந்தரி என்பதுன் நாமம்
பரிவுடன் எனக்கருளும் கேசவன் சோதரி
அனுபல்லவி
தரித்திருப்பது கடம்ப மலர்மாலையும்
கரங்களில் வில்லும் பஞ்ச பாணங்களும்
சரணம்
இரவு சாமமுனை வயிரவர் தொழும் நேரம்
அரவணிந்த முக்கண்ணி செம்மை நிறத்தவளே
கரங்கள் செந்நிறம் நான்குடையவளே
வரமென தருவதுன் அரவிந்த பதங்களே
No comments:
Post a Comment