எங்கும் நிறைந்திருக்கும்........
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கணபதியை வணங்கினேன்
தங்கு தடையின்றி கருமங்கள் நிறைவேறவே
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரன் அவர்துணை
சங்கரியும் கொண்டாடும் அய்ங்கரன் ஆனைமுகன்
சரணம்
நாரதர் நான்முகன் நந்தியும் கணங்களும்
சூரனை வதைத்த முருகனும் போற்றும்
வாரணமுகன் கேசவன் மருகன்
வருமிடர் தவிர்க்கும் விக்ன விநாயகன்
இராகம் : ஸரஸாங்கி தாளம்: க.சாபு
No comments:
Post a Comment