அபிராமி அந்தாதி 69
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே.
கண்ணருளே
பல்லவி
கண்ணருளே போதும் அன்னையே அபிராமி
வண்ணமலர் சூடிய கருங்கூந்தலுடைய உந்தன்
அனுபல்லவி
எண்ணியுனைப் பணிந்து கேசவன் சோதரி
திண்ணமுடன் உனது திருவடி பணிவோர்க்கு
சரணம்
மண்ணிலனைத்து செல்வமும் கல்வியும்
தெய்வீக அழகும் சோர்விலா மனமும்
நெஞ்சில் வஞ்சமிலா சுற்றமும் நட்பும்
நல்லருளனைத்தும் நாளும் கிடைத்திட
No comments:
Post a Comment