அபிராமி அந்தாதி 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
சமயங்கள் .....
பல்லவி
சமயங்கள் ஆறின் தலைவியானவளே
இமவான் மகளே கேசவன் சோதரியே
அனுபல்லவி
உமையவளே அடியார் தேறுதற்குரிய
சமய நெறிகள் அனைத்தையுமளிப்பவளே
சரணம்
திமிருடன் வீணர்கள் பரசமயம் உண்டென்று
அமரிக்கையுடனே பேசித் திரியும் செயல்
தமது குறுந்தடியால் குன்றுமலையொன்றை
தகர்த்திட முயலும் வீண் செயலன்றோ
No comments:
Post a Comment