அபிராமி அந்தாதி 59
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
மலரம்பைந்தும்....
பல்லவி
மலரம்பைந்தும் கரும்பு வில்லும்
மலர்க் கரத்திலேந்தும் கேசவன் சோதரி
அனுபல்லவி
உலகிலுன் பதமன்றி வேறு புகலில்லையென
நலமுடனறிந்துமுனைப் பணியாதிருந்தேன்
சரணம்
பலமிலாத பஞ்சினைப் பழிக்கும்
மலரடியுடைய அன்னையர் தன் பாலரை
பல பிழை புரிந்தாலும் மன்னித்து ஏற்பது போல்
உலகநாயகியே எனையாண்டருள்வாய்
No comments:
Post a Comment