அபிராமி அந்தாதி 88
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
பரம்பொருள்......
பல்லவி
பரம்பொருள் நீயென உனையே துதித்தேன்
பரமேச்வரியே கேசவன் சோதரி
அனுபல்லவி
கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிந்திடுமெனையே
தரமல்லவனென்றே தள்ளலாகாது
சரணம்
பரந்தாமனுந்தியிலுதித்த பிரமன்தன்
சிரமொன்றை அறுத்த கரம்தனையுடையவனின்
புரமெரிக்க மேருவை வில்லாக வளைத்தவனின்
பரமேச்வரனின் இடப்பாகம் கொண்டவளே
No comments:
Post a Comment