அபிராமி அந்தாதி 87
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
மொழிக்கும்........
பல்லவி
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவளே
அழகிய வடிவுடைய கேசவன் சோதரி
அனுபல்லவி
பழவினையனைத்தும் நீங்கிடச் செய்தென்
விழிக்குக் காட்சி தந்து வியந்திடச் செய்தாய்
சரணம்
விழியால் காம தேவனை எரித்து
அழித்த முக்கண்ணனை சிவபெருமானை
அழியாத விரதங்கள் பூண்டவனை உலகம்
பழிக்குமாறு ஒருபாகம் கொண்டவளே
No comments:
Post a Comment