அபிராமி அந்தாதி 77
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
நான்மறை போற்றும்.......
பல்லவி
நான் மறை போற்றும் நாமங்கள் ஓதியுனை
அடியார்வழிபடுவர் கேசவன் சோதரி
அனுபல்லவி
வான்புகழ் கொண்டவளே சூலி மாலினி
வான் நிலவின் பிறையணிந்த வயிரவியெனவும்
சரணம்
வானுறை மண்டலத்தில் ஒளிரும் பைரவியே
வஞ்சகர் குருதியைக் குடிக்குமுயர் சண்டியே
பஞ்ச பாணமும் பாசமும் அங்குசமும்
ஏந்திய பஞ்சமி காளி வாராகியென
No comments:
Post a Comment