வாட்டாற்றில்
பல்லவி
வாட்டாற்றில் பள்ளிகொண்ட எட்டெழுத்தானை
எப்போது காண்பேனோ — திரு
அனுபல்லவி
பட்டாடை பரிவட்டம் கிட்டாமல் போனாலும்
எட்டி நின்றேனும் — திரு
சரணம்
கட்டழகுத் திருமேனி பவளவாய்
சுட்டும் விழிக்கமலம் சூரியனும் சந்திரனும்
பட்டுப் பீதாம்பரம் துளபம் கௌஸ்துபம்
அணிந்த ஆதி கேசவனைத் திரு
இராகம் : வாசஸ்பதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment