அபிராமி அந்தாதி 60
பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?
பாலினுமினிய......
பல்லவி
பாலினுமினிய சொல்லுடையவளே
ஞாலம் போற்றும் கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
கோலமிகு உந்தன் பனிமலர்ப் பதம் வைக்க
மாலனை விடவும் தேவர்கள் வணங்கிடும்
சூலபாணியின் கொன்றையணி சடைவிடவும்
சாலச் சிறந்த தெந்தன் முடை நாய்த்தலையோ!
No comments:
Post a Comment