அபிராமி அந்தாதி 52
வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
அம்புலி......
பல்லவி
அம்புலி பிறையணிந்த எம்பெருமான் சிவனின்
அன்பு மனையாளே கேசவன் சோதரியே
அனுபல்லவி
நம்புமடியார்க்கு இன்பமளிப்பவளே
உம்பர் முனிவர் பணி அம்பிகையே தாயே
சரணம்
செம்பொற் குவியல்கள் உயர்ந்த மணி மகுடங்கள்
அம்புவி ரதங்கள் யானைகள் குதிரைகள்
நல்முத்து மாலைகள் பல்லக்கு இவையாவும்
அம்புயமே அடியார் பணிந்திடும் சின்னங்களே
No comments:
Post a Comment