அபிராமி அந்தாதி 43
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
சிலம்பணிந்த.....
பல்லவி
சிலம்பணிந்த அழகிய பதங்களை உடையவளே
நலந்தரும் சொல்லுடைய கேசவன் சோதரியே
அனுபல்லவி
வலமிடம் கரங்களில் பாசாங்குசமும்
மலரம்புமேந்திய சிவந்த மேனியளே
சரணம்
பலமும் வஞ்சக மனம் கொண்ட அசுர
குலத்துதித்த திரிபுர அரக்கரை மேரு
மலையை வில்லாக்கி எரித்த இறைவனை
வலப்புறம் வைத்து இடமமர்ந்தவளே
No comments:
Post a Comment