அபிராமி அந்தாதி 44
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
சங்கரனார்......
பல்லவி
சங்கரனார் மனை மங்கலமே நீயே
எங்கள் சங்கரனின் தாயுமானாய்
அனுபல்லவி
பங்கயமே அதனால் கடவுளரனைவருக்கும்
எங்களுக்கும் மேலான இறைவியுமானாய்
சரணம்
திங்கள் பிறையணிந்த கேசவன் சோதரியே
மங்களம் தந்திடும் ஆதிபராசக்தியே
சங்கரி இனியும் பிற தெய்வம் தொழுதிலேன்
சங்கடம் கொள்ளேன் துன்பங்களால் துவளேன்
No comments:
Post a Comment