அபிராமி அந்தாதி 54
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
திரிபுர நாயகி....
பல்லவி
திரிபுர நாயகி கேசவன் சோதரியின்
திருவடித் தாமரையை அனுதினம் பணிவோம்
அனுபல்லவி
சரி நிகர் சமானம் தனக்கொருவரில்லாத
பெருமைக்குரிய சிவகாமேச்வரி
சரணம்
வறியவரெனச் சொல்லிப் பொருள் வேண்டி
நெறியிலா ஒருவரிடம் கையேந்தித் தன்மானம்
பறி போகும் ஒரு நிலை வாராதிருக்க
அறிவுடன் துதித்திடும் அவளடியார் போலவே
No comments:
Post a Comment