அபிராமி அந்தாதி 57
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று,
பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?
எந்தை அளந்த......
பல்லவி
எந்தை அளந்த இரு நாழி நெல் கொண்டு
இந்த உலகைக் காத்த கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
பைந்தமிழால் உந்தன் புகழ் பாட வைத்தாய்
சுந்தரி எனை நீயே ஒருவர் முன் சென்றவரை
பொய்யும் மெய்யும் கலந்து போற்றிடச் செய்த
விந்தையை வியந்தேனுன் மெய்யருளிதுவோ
No comments:
Post a Comment