சதாசிவன் மகனை.....
பல்லவி
சதாசிவன் மகனை முருகனை
சதா துதித்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
பதாரவிந்தம் பணிந்திடுமென்னை
உதாசீனம் செய்யாமலென்றும்
சரணம்
விதம் விதமான சொந்த பந்தங்களும்
இதந்தருமிவ்வுலகம் சதமல்ல என்றே
நிதம் பணிந்தேன் அந்த கேசவன் மருகனை
முதம் தருவாயென பதம் பணிந்தனுதினம்
No comments:
Post a Comment