அபிராமி அந்தாதி 68
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
பவபயம்......
பல்லவி
பவபயம் நீங்கி அனைத்து தனமும் பெற
சிவகாம சுந்தரி கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
புவனம்,நீர்,நெருப்பு, காற்று,ஆகாயம்,
சுவையொளி,மணமும்,தொடு உணர்வும்,ஒலியும்,
இவையனைத்தும் சேருமுன் அழகிய சீறடியை
உவகையுடன் அடியார் துதித்தாலும் போதும்
No comments:
Post a Comment