அபிராமி அந்தாதி 65
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.
வானும் புவியும்......
பல்லவி
வானும் புவியும் அண்டவெளியும் காண
ஊனுடம்பில்லாத காமனை எரித்தவர்க்கு
அனுபல்லவி
தீனசரண்யன் தவத்திற் சிறந்த
தேனுபுரீசன் சிவபெருமானுக்கு
சரணம்
மூவிருமுகமும் பன்னிருகரமும் கொண்ட
அறிவில் சிறந்த அழகிய முருகனைப்
படைத்திடும் ஆற்றலை, கேசவன் சோதரி,
அளித்தது உந்தன் வல்லமையன்றோ
No comments:
Post a Comment