அபிராமி அந்தாதி 55
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
ஆயிரம் மின்னல்களின்.....
பல்லவி
ஆயிரம் மின்னல்களின் ஒளிவடிவானவளே
மாயே அகம் மகிழச் செய்யுமானந்தவல்லி
அனுபல்லவி
தாயே அருமறை நான்கினுக்கும்
நீயே முதலும் முடிவும் நடுவுமானாய்
சரணம்
தூயவளே திருவே கேசவன் சோதரியே
ஆயிரம் நாமங்கள் உடையவளே உன்னை
நினைத்துத்துதித்தாலும் நினையாதிருந்தாலும்
தினையளவும் உனக்கொரு குறையுமில்லை
No comments:
Post a Comment