அபிராமி அந்தாதி 53
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
தன்னந்தனியிருக்கும்
பல்லவி
தன்னந்தனியிருக்கும் உன்னடியார் தமக்கு
இன்னொரு தவமில்லை கேசவன் சோதரி
அனுபல்லவி
உன்னருளை உன் வடிவை அன்னையே அபிராமி
தன் மனத்தில் வைத்து அனுதினம் போற்றி
சரணம்
சின்னஞ்சிறிய இடையில் செம்பட்டும்
கன்னங்கரிய சடையில் பிச்சிப் பூவும்
மின்னும் முத்துமாலையும் அது புரளும் பெருமுலையும்
இன்னும் முக்கண்ணும் உடைய உனைப்பணியும்
No comments:
Post a Comment