கல்யாணி அம்மனை......
பல்லவி
கல்யாணி அம்மனை மனமாரத் துதித்தேன்
கைலாசநாதர் உடனிருந்து போற்றும்
அனுபல்லவி
அல்லலிடர் களையும் கேசவன் சோதரி
செல்வம் குலம் கல்வி நல்வாழ்வளித்திடும்
சரணம்
வல்லரக்கரையழித்து நல்லவரைக் காக்க
மெல்லிடையாள் அகிலாண்டேஸ்வரியை
சொல்லுக் கடங்காத வடிவுடையாளை
நல்லடியார் பலர் வாழும் பூவனூர் தலத்துறையும்
இராகம் : விச்வாம்பரி தாளம் : ஆதி
No comments:
Post a Comment