அபிராமி அந்தாதி 79
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அன்னையே.....
பல்லவி
அன்னையே கேசவன் சோதரி உந்தனுக்கு
அருள் தரும் விழிகள் இரண்டுண்டு
அனுபல்லவி
புன்னகை முகத்தினளே வேதம் சொன்னபடி
உன்னை வழிபட நெஞ்சம் எனக்குண்டு
சரணம்
இன்னருள் தருமுன் நல்வழியிருக்க
நன்னெறி காட்டும் நான்மறை துணையிருக்க
இன்னமும் கொடிய பாவங்களே செய்து
நரகத்தில் விழச்செய்யும் கொடியவர் கூட்டெதற்கு
No comments:
Post a Comment