அபிராமி அந்தாதி 64
வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
உன்னிடமே.....
பல்லவி
உன்னிடமே அன்பு கொண்டேன் கேசவன் சோதரி
உன் புகழன்றி வேறொன்றும் பேசேன்
அனுபல்லவி
உன்னருளே போதுமென உளமாரத்துதித்து
உன்னிரு தாமரைத் திருவடியே பணிந்தேன்
சரணம்
இன்னுயிரை வீணில் பாலி வாங்கும் தெய்வங்கள்
பின் சென்று எந்நாளும் எப்போதும் வணங்கேன்
உன் மேனி ஒளியன்றி மண்ணிலும் விண்ணிலும்
இந்நான்கு திசைகளிலும் வேறொன்றும் காணேன்
No comments:
Post a Comment