அபிராமி அந்தாதி 76
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ்
கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
மலரம்பைந்துடைய....
பல்லவி
மலரம்பைந்துடைய கேசவன் சோதரி
நலம் தருமுன் கோலம் மனத்தில் துதித்தேன்
அனுபல்லவி
கலங்க வைக்கும் யமன் வரும் வழிதனையுனதருளால்
சுலபமாயறிந்து எளிதில் மறித்தேன்
சரணம்
மலர்களை வண்டு துளைப்பதனால் தேன் சொரியும்
கொன்றைமலர் மாலையை சூடிய சிவனின்
ஒருபாகம் தனையே உரிமையுடன் பறித்து
அதில் குடிபுகுந்த பைரவியே தாயே
No comments:
Post a Comment