அபிராமி அந்தாதி 58
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
கமலமென.....
பல்லவி
கமலமெனக் காலை வேளையில் பூத்திருக்கும்
கமலமே மனத் தாமரையில் அமர்ந்தவளே
அனுபல்லவி
கமலக்கண்ணியே கேசவன் சோதரியே
கமல மொட்டுக்கள் போல் தனமுடையவளே
சரணம்
கமலவனம் போல் காட்சியளித்திடுமுன்
கமலமலர்க்கரமும் கருணை ததும்பும்
கமலவிழிகளும் கமலவதனமும்
கமல ப்பாதமுமே என்றும் எந்தன் துணை
No comments:
Post a Comment