அபிராமி அந்தாதி 85
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
கண்ட திசையிலெலாம்....
பல்லவி
கண்ட திசையிலெலாம் கேசவன் சோதரி
கண்டேனல்லல் தீர்க்குமுன்னழகுத் திருமேனி
அனுபல்லவி
கண்டேன் பனிமலர்ச் சிறகுகளுடைய
வண்டுகள் மொய்க்கும் புதுமலர்க்கணைகளும்
சரணம்
கண்டேன் கரங்களில் கரும்பும் பாசாங்குசமும்
கண்டேனுன் வடிவான சின்னஞ்சிறு இடையும்
குங்குமம் பூசிய தனங்களுமதன் மேலே
தவழ்ந்தாடும் நல்முத்து மாலைகளுடனே
No comments:
Post a Comment