அபிராமி அந்தாதி 48
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ- -
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
படமெடுத்த.......
பல்லவி
படமெடுத்த விட அரவை கழுத்தில் சூடிடும்
விடமுண்ட கண்டன் சிவகாமேச்வரனின்
அனுபல்லவி
சுடர் நிலவணிந்த சடைமுடிக் குன்றில்
படரும் பசுங்கொடியே கேசவன் சோதரியே
சரணம்
இடர்கள் களைந்து இமைப்போதும் நெஞ்சில்
திடமாயுனை நினைந்து துதித்திடுமடியவர்
குடலும் தோலும் குருதியும் கொண்ட இவ்
வுடலினை இனியும் அடைந்திட மாட்டார்
No comments:
Post a Comment