அபிராமி அந்தாதி 56
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
ஒன்றாக......
பல்லவி
ஒன்றாகத் தோன்றி பலவாக விரிந்து
நன்றாக இவ்வுலகில் எங்கும் நிறைந்தவளே
அனுபல்லவி
என்றாலும் அனைத்திலும் நீங்கி இருப்பவளே
பொன்றாதென் நெஞ்சில் நின்றாடுபவளே
சரணம்
அன்று ஆலிலையில் துயின்ற மாலவனும்
இன்றும் உன்னுடனே இருக்கின்ற ஈசனுமே
நன்றிதனை அறிவார் இந்நாநிலத்தே
என்றும் எனையாளும் கேசவன் சோதரி
No comments:
Post a Comment