பொங்ஙரவும் ........
பல்லவி
பொங்கரவும் திங்களும் சூடிய சங்கரி ஶ்ரீசாமுண்டீச்வரி
மங்களம் தந்தருள்வாய் மலர்ப் பதம் பணிந்தேன் சிவகாமேச்வரி
அனுபல்லவி
சங்கரன் பங்கிலுறை அங்கயற்கண்ணி அகிலாண்டேச்வரி
சிங்க வாகனம்தனிலமர் ஈச்வரி கேசவன் சோதரி
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் ஆதி பராசக்தி ஶ்ரீக்ருஷ்ணமாரி
பொங்கும் அருள் மழை பொழிந்திடும் அங்காளப் பரமேச்வரி
தங்கும் பொருளும் கல்வியும் நல்கும் ரமாவாணி ப்ரியசகி
மங்காத புகழ் மேவும் பூவனூர் தலம் வளர் ராஜராஜேஸ்வரி
இராகம் : ஹம்சத்வனி தாளம் : சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment