அபிராமி அந்தாதி 91
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
மின்னலை.......
பல்லவி
மின்னலைப் பழிக்கும் மெல்லிடையாளை
புன்னகை முகத்தாளைக் கேசவன் சோதரியை
அனுபல்லவி
பன்னகாபரணன் விரிசடையோனணைத்திடும்
பொன்னனைய அழகிய மென் முலையுடையாளை
சரணம்
நன்னெறி காட்டிடும் மறைசொல்லும் வழியில்
உன்னைத் துதித்திடுமடியாரை பணிபவர்க்கு
இன்னிசையுடனே வெண் யானை மீது
பவனி வருமுயர் பதவி கிடைத்திடும்
No comments:
Post a Comment