அபிராமி அந்தாதி 83
விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.
மணம் தரும்.....
பல்லவி
மணம் தரும் தாமரைத் திருவடி உடைய
அணங்கே கேசவன் சோதரியதனை
அனுபல்லவி
குணமுடன் தேன் சொரியும் புது மலர் தூவி
இரவு பகல் பணியும் வலியாரடைவர்
சரணம்
தேவர்கள் மற்றும் யாவரும் விரும்பும்
தேவேந்திரனின் பதவியுமவனது
வெள்ளை யானையும் வச்சிராயுதமும்
கற்பகக்காவும் ஆகாயகங்கையும்
No comments:
Post a Comment