அபிராமி அந்தாதி 61
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தேயாத புகழ்.....
பல்லவி
தேயாத புகழ் மேவும் செங்கண்மால் கேசவனின்
மாயாவென்னுமழகுத் திருத் தங்கச்சியே
அனுபல்லவி
சேயாக இமவான் மகளாக வளர்ந்தவளே
தூயவளே அடியார் துயர் துடைப்பவளே
சரணம்
நாயேனெனையும் ஒரு பொருட்டாக நினந்து
பேயேனெனக்குமுன் கடைக்கணருள் தந்து
நீயே நானறியாது எனையாண்டுகொண்டாயே
தாயே தயாபரியே அடியார்க்கருள்பவளே
No comments:
Post a Comment