அபிராமி அந்தாதி 71
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
அழகிற்கொருவரும்.......
பல்லவி
அழகிற்கொருவரும் இணையில்லாதவளே
சுழல் சக்கரக்கையன் கேசவன் சோதரி
அனுபல்லவி
குழந்தை போலுள்ள குளிர்ந்த இளம்பிறையை
குழலில் அழகுடன் கொம்பென அளிந்தவளே
சரணம்
பழகிய அருமறைகள் உன்னிரு திருவடியில்
விழுந்து தொழுவதனால் பாதம் சிவந்த உந்தன்
கழலடி பணிந்த பின் நெஞ்சே இனி எதையும்
இழந்து விட்டோமென நீ கலங்காதே !
No comments:
Post a Comment