அபிராமி அந்தாதி 74
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
கண் மூன்றுடைய......
பல்லவி
கண் மூன்றுடைய முக்கண்ணன் சிவனும்
கேசவனும் பிரமனும் நான்மறையும் போற்றும்
அனுபல்லவி
பெண்ணணங்கே அபிராமவல்லியுன் இணையடி
பற்றிப் பயன் கொண்ட அடியாரனைவரும்
சரணம்
விண்ணுலகப் பாவையரின் ஆடலும் பாடலும்
பொன்னாலான கட்டிலில் சயனமும்
இவையனைத்துமிடம் பெறும் கற்பகச் சோலையும்
பெரிதென எண்ணி விரும்பிட மாட்டார்
No comments:
Post a Comment