அபிராமி அந்தாதி 51
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
தருணம் இதுவே......
பல்லவி
தருணம் இதுவே கேசவன் சோதரி
வரமருள்வாய் தாயே திரிபுரசுந்தரி
சமஷ்டி சரணம்
திரிபுரம் நிலையெனக் கருதிக் களித்த
அரக்கரை எரித்தழித்த சிவனும் திருமாலும்
சரணமெனப் பணியும் நாயகியே அடியார்
மரணம் பிறப்பெனும் மாயையை அகற்றிட
No comments:
Post a Comment