அபிராமி அந்தாதி 80
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.
பொன் தாமரை......
பல்லவி
பொன் தாமரை மலரில் அமர்ந்திருப்பவளே
என்னையுன்னடியார் கூட்டதில் சேர்த்தவளே
அனுபல்லவி
என் கொடிய வினையனைத்துமழித்தவளே உனை
உள்ள வண்ணம் காட்டிய கேசவன் சோதரி
சரணம்
உன்னைக் கண்ட என் கண்ணும் மனமும்
தன்னாலானந்தம் அடைந்து களித்தது
உன்னருளாலன்றோ நீ ஆடிய நாடகத்தை
என்னவென்று சொல்வேன் ஏதென்று நினைப்பேன்
No comments:
Post a Comment