அபிராமி அந்தாதி 78
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
என்னிரு கண்களிலும்......
பல்லவி
என்னிரு கண்களிலும் உன் வடிவை எழுதி வைத்தேன்
என் வழித்துணை நீயே கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
பொன் கலசம் போல த்திருமுலையதன்மேல்
நன் மணச் சந்தனப் பூச்சும் அணிமணியும்
மின்னும் வயிரக் குழையும் முத்துக்கொப்பும்
இன்னும் மதிமுகமும் கடைக்கண்ணருளும்
No comments:
Post a Comment