அபிராமி அந்தாதி 42
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
மதர்த்திருக்கும்.....
பல்லவி
மதர்த்திருக்கும் மலையென பருத்த மார்பகந்தன்னில்
முத்து மாலையணிந்து சிவன் மனத்தைக் கவர்ந்தவளே
அனுபல்லவி
இதம் தரும் இனிய மொழியுடையவளே
நிதம் பணிந்தேத்தும் அடியார்க்கருள்பவளே
பல்லவி
பதங்களில் வேத சிலம்பணிந்தவளே
படமெடுத்த நல்லரவின் வடிவினைப் போலவே
துடியிடையுடையவளே திரிபுரசுந்தரியே
கதி நீயே தாயே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment