அபிராமி அந்தாதி 70
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
கண் களிக்கும்படி.....
பல்லவி
கண் களிக்கும்படி உனைக் கண்டுகொண்டேன்
மண்மகள் விரும்பும் பச்சைநிறப் பேரழகே
அனுபல்லவி
பண்ணிசையும் விரும்பும் குரலுடையவளே
இன்னிசை வீணையேந்தும் கேசவன் சோதரி
சரணம்
தண்மதி பிறையணிந்த மதங்கர் குலப் பெண்ணே
கண்கவரழகுடைய பெருமுலையாளே
வண்ணமிகு அழகிய பூக்கள் நிறைந்த
கடம்ப வனம் தன்னில் வாசம் புரிபவளே
No comments:
Post a Comment